குவஹாத்தி: அசாமில் ஆளும் பா.ஜ. அரசு, 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000-ஐ வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக செலுத்தியுள்ளது.
இந்த உதவி, 2020 முதல் செயல்பாட்டில் உள்ள ‘ஒருனோடோய்’ என்ற வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தில் தகுதியான ஒரு பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.1,250 வழங்கப்படுகிறது.
ஜனவரியிலிருந்து நான்கு மாதங்களுக்கு உரிய தொகையை ஒருமுறையாக வழங்குவதோடு, அசாம் புத்தாண்டான போகா பிகுவை முன்னிட்டு கூடுதல் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முன்பே அறிவித்திருந்தார்.
அதன்படி, ‘ஒருனோடோய்’ திட்டத்தில் உள்ள பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு தலா ரூ.9,000 என மொத்த தொகை நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.




