சென்னையில் இன்று (மார்ச் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120 ஆக உள்ளது.
சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் தங்க விலையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 9 அன்று ஆபரணத் தங்கம் கிராம் ரூ.14,950-க்கும், சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் ரூ.290 ஆக இருந்தது.
மார்ச் 10 அன்று தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050 ஆகவும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400 ஆகவும் விற்பனையானது. அதே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300 ஆகி, கிலோ ரூ.3,00,000-க்கு சென்றது.
இன்றைய உயர்வுடன் கடந்த 2 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.300-க்கும், கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




