மார்ச் 11 அன்று துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் வீசியதாக கூறப்படும் ட்ரோன்கள் விழுந்து வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் இந்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை மையமாகக் கொண்ட போர் 12வது நாளாக நீடிக்கும் நிலையில், சிறிது இடைவேளைக்குப் பிறகு வளைகுடா நாடுகளில் தாக்குதல்களை ஈரான் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கத்தார், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தையடுத்து துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சீராக நடைபெறுவதாகவும், பெரிய சேதம் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.