செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பலவீனமாக இருந்து, முக்கிய குறியீடுகள் கணிசமாக சரிந்தன.

பிஎஸ்இ சென்செக்ஸ் 912 புள்ளிகள் குறைந்து 77,174 புள்ளிகளில் வர்த்தகமானது. 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைவுடன் இருந்ததால் விற்பனை அழுத்தம் பரவலாக காணப்பட்டது.

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது முதலீட்டாளர்களின் மனநிலையை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சரிவால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 287 புள்ளிகள் சரிந்து 23,974 புள்ளிகளில் வர்த்தகமானது.