இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் 3 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகவும் தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி சென்றபோது, ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த உடனே கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டதாகவும், 3 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்காசியாவில் நிலவும் மோதல் சூழ்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




