சென்னை ராஜ்பவனில் இன்று நடைபெற்ற விழாவில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார்.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக உள்ள அர்லேகருக்கு தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அர்லேகரை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
இதனிடையே, ஆர்.என். ரவியும் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.




