சென்னையில் இன்று (மார்ச் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970 ஆக உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தங்க விலையில் ஏற்றத் தாழ்வுகள் தொடர்கின்றன. தமிழகத்தில் மார்ச் 9 அன்று தங்கம் கிராம் ரூ.14,950-க்கும், சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் ரூ.290 ஆக இருந்தது.
மார்ச் 10 அன்று தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050 ஆகவும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400 ஆகவும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300 ஆகி, கிலோ ரூ.3,00,000 ஆக இருந்தது.
மார்ச் 11 அன்று தங்கம் மேலும் உயர்ந்து சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,20,960 ஆகவும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120 ஆகவும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.300-க்கும், கிலோ ரூ.3,00,000-க்கும் இருந்தது.
இந்நிலையில் மார்ச் 12 அன்று தங்கம் கணிசமாக சரிந்ததுடன், வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290 ஆகவும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,90,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.




