மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளதாக டெஹ்ரான் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்பே கூறியிருந்தார்.

அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட், அமெரிக்க கடற்படை ஒரு எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாக அழைத்துச் சென்றதாக சமூக ஊடக பதிவில் தெரிவித்தார். ஆனால் அந்த பதிவு சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.

இதையடுத்து வெள்ளை மாளிகை தலையிட்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த எண்ணெய் டேங்கரையும் அமெரிக்க கடற்படை அழைத்துச் செல்லவில்லை என்று தெளிவுபடுத்தியது.

இதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடுமையாக மறுப்பு தெரிவித்தது. ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்க அமெரிக்க கடற்படை கப்பல்கள் துணியவில்லை என்றும், இது அப்பட்டமான பொய் என்றும் அந்தப் படை கூறியுள்ளது.