ஈராக் கோர் அல் ஜூபைர் துறைமுகம் அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கப்பல் பணியாளராக இருந்த ஒரு இந்தியர் உயிரிழந்தார்.
சபேசியா விஷ்ணு என அடையாளம் காணப்பட்ட அந்த டேங்கரை ஈரானின் தற்கொலைப் படகு குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு மீதமுள்ள 27 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மேற்கு ஆசியப் பகுதியில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இந்த கப்பல் 2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கச்சா எண்ணெய் டேங்கர் என்றும், சுமார் 228.6 மீட்டர் நீளம், 32.57 மீட்டர் அகலம் மற்றும் 42,010 டன் மொத்த எடை கொண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் துறைமுகம் நோக்கி சென்ற தாய்லாந்து நாட்டு கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியுறவு அமைச்சகம் முன்பே கடுமையாக கண்டித்திருந்தது.




