இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தி சேனல் நடத்திய மாநாட்டில் பேசிய அவர், இருநாட்டு உறவு வரலாற்றுச் சிறப்பு மிக்க வளர்ச்சியை நோக்கி நகர்கிறது என்றும், வரும் மாதங்களில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இரு நாடுகளுக்கிடையே வலிமையும் உத்வேகமும் வெளிப்படும் வகையில் தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்கனவே நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான தனிப்பட்ட உறவு, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லாத காலத்திலும் மோடி அவருடன் நட்புறவைத் தொடர்ந்து பேணினார்; இதை டிரம்ப் உண்மையான நட்பின் அடையாளமாகக் கண்டதாகவும் அவர் கூறினார்.