மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இந்த உரையாடலில், ஈரானில் வன்முறை தீவிரமாவதும், பொதுமக்கள் உயிரிழப்பும், உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களும் குறித்து தாம் ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பொருட்கள் மற்றும் எரிசக்தி போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரச்னைக்கு போர் தீர்வாகாது; பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், ஈரானில் சுமார் 9,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.




