தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி, புதன்கிழமை மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாநில நிர்வாகம் நடைபெற்று வருகிறது. மார்ச் 5-ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்த முன்னாள் ஆளுநர் அனந்த போஸின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றதைத் தொடர்ந்து, ரவி புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து ஒரு நாள் முன்பு விடைபெற்ற ரவி, மேற்கு வங்கத்திற்கு சென்று பொறுப்பேற்றார்.
கொல்கட்டா ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கொல்கட்டா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டசபை சபாநாயகர் பீமன் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




