புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள சசிகலா, அதன் பெயரும் தேர்தல் சின்னமும் அறிவித்து, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதை கூறினார்.
கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும், சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தச் சின்னத்தில் தமது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என சசிகலா தெரிவித்தார்.
கட்சியின் பின்னணி குறித்து பேசுகையில், தொண்டர்கள் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார். தமிழக மக்களை திமுக “கசக்கிப் பிழிந்து” கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டி, அதற்கு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் “தனிமரம் தோப்பாகாது” எனக் கூறிய சசிகலா, தேர்தலை கூட்டணியுடன் சந்திப்போம் என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.




