லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், சன் குழுமத்துக்கு சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமதை தேர்வு செய்துள்ளது.

அப்ரார் அஹமது ரூ.2.34 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற அணிகளுடன் போட்டியிட்டு அதிக தொகை செலுத்தி அவரை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த விவாதம், இந்திய பிரீமியர் லீக் தொடரில் 2009-க்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறாத பின்னணியிலும், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் சமீப ஆண்டுகளில் கிரிக்கெட் தொடர்புகளிலும் பிரதிபலித்ததாக கூறப்படும் சூழலிலும் எழுந்துள்ளது.

ஏலத்தின் மூலம் ஒப்பந்தம் உறுதியான நிலையில், வெளிநாட்டு லீகில் இந்திய உரிமையாளர்கள் கொண்ட அணியொன்று பாகிஸ்தான் வீரருக்கு பெரிய தொகை செலுத்தியதன் ‘படிமம்’ குறித்து இணையத்தில் விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.