மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலைமை பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை நடத்துவதே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரும் விரோத நடவடிக்கைகளை நிறுத்தி, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தி, பொதுமக்களைப் பாதுகாத்து, தாமதமின்றி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மேற்காசிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தில், ஈரான் உடனடியாக அனைத்து தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தடைகளையும் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.




