கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா இன்ஸ்டாகிராமில் கல்வியின் முக்கியத்துவத்தை நகைச்சுவையாக எடுத்துரைக்கும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளனர்.

“Hi Guys… நான் உங்கள் தேவா” என்ற அறிமுகத்துடன் வரும் இவர்களின் பதிவுகள், படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தி இணையத்தில் வைரலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டி, புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் அவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

ரீல்ஸ் நன்றாகப் போடுகிறீர்கள்; அதேபோல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என தேவா, ஜீவாவுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.