தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் பொறுப்பு மாற்றம் தொடர்பான உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக போலீஸ் உளவுத்துறையின் டிஜிபியாக பால நாக தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏடிஜிபி பதவியிலிருந்து டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவில் ஐ.ஜியாக பணியாற்றும் சந்தோஷ் குமாருக்கு, பொருளாதார ஏடிஜிபி பதவிக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனாவுக்கு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.




