எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மின் அடுப்பு பயன்படுத்தும் ஹோட்டல்கள், டீ கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மின் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், எரிவாயு தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் வரை இந்த மின்கட்டண சலுகை தொடரும் என்றார்.
மேலும், உழவர் சந்தைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை கட்டுப்பாடின்றி விற்கலாம் என்றும், உணவகங்கள் காய்கறி வாங்குவதை குறைத்துள்ளதால் வீணாவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதர தகவல்களாக, விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி தேவையில்லை என்றும், பெட்ரோல்-டீசல் கையிருப்பு 9 நாட்களுக்கு இருப்பதால் தட்டுப்பாடு இல்லை என்றும் கூறினார். வீட்டு உபயோக சிலிண்டர் இம்மாத இறுதி வரை இருப்பு இருக்கும்; வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.




