சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நடிகர்கள் வடிவேலு, நாசர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதில் பேசிய வடிவேலு, முதல்வர் மு.க. ஸ்டாலின் 73 வயதாக இருந்தாலும் 37 வயது இளைஞரைப் போல செயல்படுவதாக கூறினார். தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று சொன்ன பலர் இன்று ஆள் தெரியாமல் காணாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க.க்கு தஞ்சாவூர் கோபுரம் போன்ற நீண்ட வரலாறு இருப்பதால் கட்சி நிமிர்ந்து நிற்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.5,000 வழங்கி மக்களுக்கு “இன்ப அதிர்ச்சி” கொடுத்ததாக ஸ்டாலினை அவர் பாராட்டினார். தி.மு.க.வும் ஸ்டாலினும் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு எனவும் கூறினார்.

வரும் தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்றும், இதற்கான முடிவை மக்கள் ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் கூறி, முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்தார்.