பிரட் ஸ்லைஸ்களை வைத்து, வீட்டிலேயே ரசமலாய் போல ஒரு எளிய இனிப்பை தயாரிக்கலாம். குட்டீஸ்களுக்கு பிடித்தமான டெசர்டாக இது விரைவில் செய்யக்கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: பிரட் – 4 ஸ்லைஸ்கள்; துருவிய பன்னீர் – 1/2 கப்; பால் பொடி – 1/2 கப்; பொடித்த சர்க்கரை – 8 ஸ்பூன்; காய்ச்சி ஆறிய பால் – 1/2 கப்; மஞ்சள் உணவு நிறம் – ஒரு சிட்டிகை; பிரஷ் கிரீம் – 2 ஸ்பூன்; ட்ரை ஃப்ரூட்ஸ் – 2 ஸ்பூன்.

தயாரிப்பு: பிரட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி, சிறு துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பன்னீர், பால் பொடி, பொடித்த சர்க்கரை சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் பால், பால் பொடி, பொடித்த சர்க்கரை மற்றும் மஞ்சள் நிறம் சேர்த்து கலக்கி, அதில் பிரஷ் கிரீம் சேர்க்கவும். அகலமான பாத்திரத்தில் உருண்டைகளை வைத்து, மேலே பால் கலவையை ஊற்றி, ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரிக்கவும். மூடி வைத்து 2 மணி நேரம் வைத்தால் பிரட் ரசமலாய் தயார்.