மேற்காசியாவில் தொடரும் போரின் பின்னணியில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தானில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், உயர்மட்ட ஆலோசனையில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து விவாதித்த பிறகு, 5% முதல் 30% வரை சம்பளக் குறைப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் சேமிப்பு முழுவதும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

மேலும் அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50% குறைக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் 60% அரசு வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.