ஈரானின் இஸ்லாமிய குடியரசின் 10 முக்கிய தலைவர்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.100 கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இதில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் இடம்பெற்றுள்ளார்.
தகவலின்படி, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பிப். 28 அன்று அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் உயிரிழந்தார். இதன் பின்னர் ஈரான் அரசு வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. மேலும் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கால் இழந்து கோமாவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘நீதிக்கான வெகுமதி’ (Rewards for Justice) திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில், மொஜ்தபா கமேனி மற்றும் புரட்சிகர ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உலகளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதியுடன், மற்றொரு நாட்டுக்கு மாற்றிடம் வழங்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




