நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகள் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க இன்று (மார்ச் 15) உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1983 முதல் மார்ச் 15ல் இந்த நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது; இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 1962ல் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி நுகர்வோரின் முக்கியத்துவத்தை முதன்முறையாக வலியுறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தாண்டின் மையக்கருத்து “பாதுகாப்பான தயாரிப்புகள், நம்பிக்கையான நுகர்வோர்”. வாங்கும் பொருளின் தரம், விலை, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அறிந்து கொண்டு முடிவு எடுப்பதே நுகர்வோர் உரிமைகளின் அடிப்படை என வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில் டிசம்பர் 24 தேசிய நுகர்வோர் உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகளவில் சந்தை துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நுகர்வோர் இயக்கங்கள் இந்த நாளை பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.




