காலை உணவு, சத்துணவு திட்டங்கள் வழக்கம்போல் நடைபெறும்
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் பாதிக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். திருச்சியில் அவர் இதை கூறினார்.
தட்டுப்பாடு இருந்தாலும், காலை உணவு திட்டமோ சத்துணவு திட்டமோ எந்த இடத்திலும் நிறுத்தப்படவில்லை என அவர் கூறினார். இதற்காக தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்வரின் வழிகாட்டுதல்படி, இத்திட்டங்கள் தடையின்றி தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றாலும், தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயரக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்தார். இதைத் தவிர்க்க மத்திய அரசு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




