மேற்காசிய நாடுகளில் நிலவும் “அசாதாரண சூழல்” காரணமாக, அங்குள்ள சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் ஏப். 10 வரை தேர்வுகள் நடைபெற இருந்தன.

இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில், மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. இணைப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இஸ்ரேல்–ஈரான் போர் சூழல் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடுகளில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சில பாடத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மார்ச் 16 முதல் ஏப். 10 வரை நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு உரிய காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.