ஜெய்ப்பூர்: வரதட்சணையாக சமையல் காஸ் (எல்பிஜி) சிலிண்டர் கேட்டு மருமகளை துன்புறுத்தும் குடும்பங்களின் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்; மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.

மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தட்டுப்பாடு வரலாம் என்ற அச்சம் உருவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர்கள் வாங்க மக்கள் போட்டிபோட்டு வருவதுடன், பெட்ரோல் பங்க்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், வரதட்சணை கோரிக்கைகளை கட்டுப்படுத்தவும் சிலிண்டர் முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும்; இதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என அரசு தெரிவித்தது.

இந்த அறிவிப்பு பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ராஜஸ்தான் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.