தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வருஷநாடு அருகே உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் 5 வாக்காளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஓட்டுச்சாவடி வெள்ளிமலை கிராமத்தின் பாகம் எண் 245-க்கு உட்பட்டது. வாக்காளர் பட்டியலில் 3 ஆண்கள், 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்; இவர்களில் ஒருவர் முதல் முறை வாக்காளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், சமீபத்திய பேட்டியில், தொலைதூரப் பகுதிகளில் தேர்தல் பணியில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டும் உதாரணமாக இந்த ஓட்டுச்சாவடியை குறிப்பிட்டார். ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் கரடுமுரடான மலைப்பாதையில் சுமார் மூன்று மணி நேரம் பயணித்து அதிகாரிகள் செல்ல வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஓட்டுச்சாவடி வனப்பகுதியில் அமைந்துள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.




