புதுடில்லி: சமீப நாட்களில் நாடு முழுவதும் சுமார் 12,000 சோதனைகள் நடத்தப்பட்டு, பதுக்கி வைத்திருந்த 15,000 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறையின் கூடுதல் செயலர் சுஜாதா சர்மா கூறுகையில், டில்லியில் மட்டும் சுமார் 600 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 450 சோதனைகள் நடத்தப்பட்டு 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் 564 சோதனைகள் நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சிலர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கேரளாவில் 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடந்த நிலையில், சமையல் பயன்பாட்டிற்கானதும் வணிக பயன்பாட்டிற்கானதும் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் 1,200 சோதனைகள் நடத்தப்பட்டு சுமார் 1,800 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக சுஜாதா சர்மா கூறினார்.