டெஹ்ரான்: எதிரிகள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும்; அப்போதுதான் இதுபோன்ற தாக்குதல்களை மீண்டும் செய்ய அவர்கள் நினைக்கவும் முடியாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் ஈரானியர்களை கொல்லவும் அமெரிக்க படைகளுக்கு அண்டை நாடுகள் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களில் 200 குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்ததாகவும் கூறினார்.

போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்ற நிலைப்பாடு, போரை விரும்புவதாலல்ல என்று அவர் விளக்கினார். மாறாக, எதிரிகள் மீண்டும் ஒருபோதும் இத்தகைய தாக்குதல்களை செய்ய நினைக்காத வகையில் முடிவு அமைய வேண்டும் என்பதே காரணம் என்றார்.

மேலும், எதிரிகள் இதற்கான பாடத்தை ஏற்கனவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; தாங்கள் எந்த மாதிரியான நாட்டை எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.