கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மார்ச் 17 அன்று டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக த.வெ.க.வினர் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று அவர் டில்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

விசாரணையின் போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருவதாக கூறப்படுகிறது. இதே வழக்கில் விஜய் ஏற்கனவே மூன்று முறை டில்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.