தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளில் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷன் அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் பணிச்சுமை காரணமாக வாக்குப்பதிவை தவற விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சம்பளத்துடன் விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதற்கு முன்பே ஏப்.23 அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




