சென்னை: தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை, “கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைகள்” என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவை நேற்று வெளியிட்டார்.

அந்த வீடியோவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைகள் 2,080 எனவும், அதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகள் 39,999 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எண்ணிக்கைகளை முன்வைத்து, “தி.மு.க. ஆண்டதும் போதும்; மக்கள் மாண்டதும் போதும்” என்று கூறி, ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற கருத்தை அவர் தெரிவித்தார்.

மேலும், ஐந்தாண்டுகளில் நடந்த குற்றங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்ட வீடியோ கிளிப்புகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.