இரவில் சரியாக துாங்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கம்ப்யூட்டர், டிவி, அலைபேசி போன்ற திரைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றாக துாங்க வாரத்தில் ஒரு நாள் உடலில் எண்ணெய் தேய்த்து, சுமார் அரைமணி நேரம் வெயில் படும்படி இருப்பது உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் விட்டமின் ‘டி’ பெறவும் துாக்கம் மேம்படவும் “வாழை இலை குளியல்” முறையையும் பரிந்துரைக்கின்றனர்.
அவர்கள் கூறும் முறையில், ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து, லேசான ஆடை அணிந்து உடலை நனைத்து, வீட்டின் மாடியில் வாழை இலையில் படுக்க வேண்டும். உடலில் இரண்டு வாழை இலையை கட்டி வைத்து, ஒரு மணி நேரம் வரை வெயிலில் இருக்கலாம்.
வாழை இலையின் குளிர்ச்சியால் வெப்பம் அதிகமாகத் தெரியாது; இதை செய்தால் அந்த இரவு ஆழ்ந்த துாக்கம் வரும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தினமும் குளிர்ந்த தண்ணீரில் இருவேளை குளிக்கவும், உணவில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும், மோர் மற்றும் எலுமிச்சை பானங்களில் உப்பு சேர்க்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.




