சிலர் இயற்கையாகவே இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். உலக மக்கள்தொகையில் இவர்களின் பங்கு சுமார் 10% முதல் 15% வரை என கூறப்படுகிறது.

ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் மெடிக்கல் ஸ்கூல் மேற்கொண்ட ஆய்வில், இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களை விட அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும், சில விளையாட்டுகளில் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தனித்துவமாக முத்திரை பதிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

முந்தைய ஆய்வுகளில், இடது கை பழக்கம் உள்ளவர்கள் படைப்பாற்றல் மற்றும் மொழி அறிவு போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கலாம் என கூறப்பட்டிருந்தது.