வடகொரியாவில் மார்ச் 15 அன்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆளும் கூட்டணி 99.93% ஓட்டுகளுடன் வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவில் தேர்தல்கள் பெரும்பாலும் பெயரளவுக்கே நடைபெறுகின்றன என்ற விமர்சனம் உலகளவில் நீண்ட காலமாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டின் உள்ளக நிலவரங்கள் வெளிநாடுகளுக்கு தெளிவாக தெரியாத சூழலும் குறிப்பிடப்படுகிறது.
தகவலின்படி, ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களே போட்டியிடும் நடைமுறை அதிகம். எதிர்க்கட்சிகள் இன்றி, பல இடங்களில் ஒரே வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டு, மக்கள் ஒப்புதல் அளிக்கும் வகையில் தேர்தல் நடைபெறுகிறது என கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் முக்கியமானவர் என அரசு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அவர் கல்லிம்கில் தொகுதியில் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.




