தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டுகளில், ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விஜயின் திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் தேர்வாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு, ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளில் விஜய் பாடல்களை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறுவதாவது, விஜய் கட்சி தொடங்கிய பின்னணியில், நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்த சாயல் ஏற்படாமல் இருக்கவே இந்த வழிகாட்டல் என தெரிவிக்கப்படுகிறது.
சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விஜய் பாடல்கள் ஒலிக்கும்போது, மாணவர்கள் கட்சி கொடிகளை காட்டியும், கட்சியின் பெயரை ஆரவாரமாக முழக்கமிட்டும் வீடியோக்களை வெளியிடும் சம்பவங்கள் நடந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




