சமீபகாலமாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரை பயன்படுத்தி நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், இது நம் சட்டத்தில் இல்லாத ஒன்று என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வகை அழைப்புகளில் சிக்கி பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதாகவும், பயமுறுத்தி பணம் பறிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அல்லது மத்திய அமைப்புகள் எவரையும் தொலைபேசி வாயிலாக கைது செய்வதில்லை; மேலும் பணம் கேட்டு வழக்கை முடிக்கும் நடைமுறையும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், வங்கி/ஆதார்/ஏடிஎம் விவரங்கள் மற்றும் ஓடிபி போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், வீட்டிலுள்ளவர்களுக்கு இளைஞர்கள் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.