சென்னை: வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களிலுள்ள 22 தொகுதிகளுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று அறிவாலயத்தில் நடைபெற்றது.

கட்சியின் சின்னத்தில் போட்டியிட விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார்.

இரண்டாம் நாளான நேற்று துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இதில், போடி தொகுதிக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராதாபுரம் தொகுதிக்காக சபாநாயகர் அப்பாவு, திருச்செந்தூர் தொகுதிக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துாத்துக்குடி தொகுதிக்காக அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களின் 22 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 750 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணலை முடித்துள்ளார்.