மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக புதன்கிழமை காலை இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் சரிந்து சுமார் 74,998 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 503 புள்ளிகள் குறைந்து சுமார் 23,274 புள்ளிகளில் காணப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக உயர்வுடன் வர்த்தகம் நடந்த நிலையில், இன்று அந்த போக்கு மாற்றமடைந்தது.

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டதாகவும், அதுவே சந்தை சரிவுக்கு காரணமாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.