சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தங்கள் கட்சி ‘குக்கர்’ சின்னத்தில்தான் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்தார். தொகுதி ஒதுக்கீடு குறித்து ஊடகங்களில் வெளியாகும் ஊகச் செய்திகள் உண்மையல்ல என்றும் அவர் கூறினார்.

டில்லி பயணத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க டில்லி செல்கிறேன் என்றார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதை “கபளீகரம்” செய்வதாக குற்றம்சாட்டி, அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றும், அமமுகக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி கே. பழனிசாமியிடம் முன்வைக்க உள்ளதாகவும் தினகரன் கூறினார்.

மேலும், இன்னும் நான்கு நாட்களில் தொகுதி பங்கீடு முடிவுகள் சுமூகமாக எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.