டெஹ்ரான்: உலகின் முக்கிய எண்ணெய் கடல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தும் கப்பல்களிடம், ஒவ்வொரு முறையும் ரூ.18.50 கோடி வரை கட்டணம் வசூலிப்பதை ஈரான் பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலைகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாகவும், இதற்காக ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஜலசந்தியை நிர்வகிக்கும் ஈரான், தற்போதைய கச்சா எண்ணெய் பற்றாக்குறையை தன் பக்கம் சாதகமாக மாற்ற முயல்கிறது. எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்திற்காக ஜலசந்தியை பயன்படுத்தும் நாடுகள் ஈரானுக்கு கட்டணம் செலுத்த வழிவகுக்கும் மசோதாவை பார்லிமென்ட் பரிசீலித்து வருவதாக ஒரு ஈரான் எம்பி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான இந்த வழித்தடத்தில் கட்டணம் விதிக்கப்பட்டால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




