நியூயார்க்: ஈரானுடன் நடைபெறும் மோதலைத் தொடரவும், ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் ரூ.1.84 லட்சம் கோடிக்கு மேல் கூடுதல் நிதி தேவை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 முதல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீண்டும் உற்பத்தி செய்து கையிருப்பை நிரப்ப இந்த தொகை அவசியம் என ராணுவம் கூறியுள்ளது.

இதற்கான நிதியை விடுவிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதல் பெறுமாறு வெள்ளை மாளிகையிடம் ராணுவம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு போர் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட சில எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல் வாரத்திலேயே ரூ.10,000 கோடிக்கு மேல் செலவானதாக ராணுவம் கூறிய நிலையில், போர் நீடித்தால் செலவு மேலும் உயரும் என அவர்கள் குற்றம்சாட்டினர்.