சென்னை
நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
மார்ச் 17-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசியதாக செய்திகள் வெளியாகி, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், மகளிர் ஆணையத் தலைவர் குமாரி தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
சண்முகம் ராஜ்யசபா எம்.பி. என்பதால், பார்லிமென்ட் செயலரிடம் புகார் அளிப்பதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்யவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.




