புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜ மார்ச் 21-ம் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
தே.ஜ. கூட்டணியில் பாஜ 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சிய ஜனநாயக கட்சியை (லஜக) கூட்டணியில் சேர்க்க முதல்வர் என். ரங்கசாமி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி ஒப்பந்தப்படி என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகள், பாஜ 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
பாஜ வெளியிட்ட முதல் பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்: மண்ணடிப்பட்டு (நவச்சிவாயம்), ஒசுடு (தீப்பாய்ந்தான்), காலாப்பட்டு (கல்யாணசுந்தரம்), முதலியார் பேட்டை (ஜான்குமார்), திருநள்ளாறு (ராஜசேகரன்), மாஹே (தினேஷன்), ராஜ்பவன் (ராமலிங்கம்), மணவேளி (ஏம்பலம்), நிரவி (மீனாட்சி சுந்தரம்).




