தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவராக உள்ள கார்த்தி சிதம்பரம், அறிக்கை தயாரிப்பை விரைவுபடுத்த ஊக்கத்தொகை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் அறிக்கை குழுவில் மாநில நிர்வாகிகள் 30 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து சென்னையில் நேற்று முன்தினம் கார்த்தி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த கூட்டத்தில், மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேர்தல் அறிக்கை அமைய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மக்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இரண்டு நாளில் கேட்டறிந்து, அவற்றின் சாரம்சங்கள் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவியாக, 30 உறுப்பினர்களுக்கும் தலா ரூ.25,000 வழங்கப்பட்டதாக தகவல். அந்த தொகையை பயணச் செலவுகளுக்கு பயன்படுத்துமாறும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.