ஈராக் பாக்தாத் விமான நிலையம் அருகிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் ஈராக் மீது கடுமையாகப் பிரதிபலித்து வருகிறது. பாக்தாத் மற்றும் அர்பிலில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து ஈரான் ஆதரவு குழுக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பாக்தாத் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க தளத்தை நோக்கி ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில ராக்கெட்டுகள் தளத்திற்கு அருகில் விழுந்ததாகவும் அவர்கள் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

இதனிடையே, போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் நாடு தழுவிய இணைய முடக்கம் 23வது நாளாக தொடர்வதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.