புதுடில்லி: இந்திய அரசாங்கத்தில் நீண்டகாலம் பதவி வகித்த அரசு தலைவர் என்ற புதிய சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மோடி 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் நாட்டின் பிரதமராக பணியாற்றி வருகிறார்.

இதன் மூலம் அரசு தலைமைப் பொறுப்புகளில் அவர் பணியாற்றிய காலம் 8,931 நாட்களாக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் 8,930 நாட்கள் அரசு பதவியில் இருந்து சாதனை வைத்திருந்தார்.

இந்த சாதனையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் பதிவில் பாராட்டி, இது நாட்டுக்கும் மக்களுக்கும் பிரதமர் மோடி கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.