இஸ்லாமாபாத்: சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான மையம் வெளியிட்ட உலகளாவிய பயங்கரவாத தாக்கம் குறியீடு பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
163 நாடுகளில் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுடன் உள்ள மோசமான உறவுகள் மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி), பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு (பிஎல்ஏ) ஆகியவற்றின் தாக்குதல்கள் காரணமாக நாட்டிற்கு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1,045 பயங்கரவாத சம்பவங்களில் 1,139 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அதிக தாக்குதல்களை நடத்துவது டிடிபி என்றும், அதற்கு அடுத்ததாக பிஎல்ஏ இருப்பதாகவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 70% பாகிஸ்தான், புர்கினோ பசோ, நைஜீரியா, நைஜர் மற்றும் காங்கோ ஆகிய ஐந்து நாடுகளில் பதிவாகியுள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது.




