அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலைய ஓடுதளத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு வாகனத்தில் மோதிய விபத்து நிகழ்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓடுதளத்தில் விமானம் சுமார் 39 கி.மீ வேகத்தில் சென்றபோது இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதலால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், சம்பவத்துக்குப் பிறகான காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீட்புப் பணிகள் நடைபெறுவதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்தில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.




