புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 13 பேரின் பட்டியலை மார்ச் 24 அன்று திமுக வெளியிட்டது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இண்டி கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் திமுக அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொகுதி பங்கீடு தொடர்பான முடிவு எட்டப்பட்டது.

இறுதி ஒப்பந்தப்படி காங்கிரஸ் 16 தொகுதிகளில், திமுக 13 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் வில்லியனூர்-சிவா, மங்கலம்-ரங்கன், திருபுவனை-அங்காளன், பாகூர்-செந்தில்குமார், முதலியார்பேட்டை-சம்பத், உப்பளம்-அனிபால் கென்னடி, உருளையன்பேட்டை-கோபால், நெல்லித்தோப்பு-கார்த்திகேயன், ராஜ் பவன்-விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டு-செந்தில், கதிர்காமம்-வடிவேலு, காரைக்கால் தெற்கு-நாஜிம், நிரவி டிஆர் பட்டினம்-நாக தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.